
மூத்தோருக்கான மின்னிலக்கமயமாதல் திட்டம் பற்றிய விவரம்
நாம் ஒன்றுபட்ட தேசமாக மின்னிலக்க எதிர்காலத்தை நோக்கி விரைவாகச் செல்கையில், சிங்கப்பூர் மின்னிலக்கச் சமூகத்தில் அனைவரும் இடம்பெற்றிருப்பதை உறுதி செய்வதே எங்களின் இலக்கு.
அனைவரும் அங்கம் வகிக்கும் சிங்கப்பூர் மின்னிலக்கச் சமூகம்
நம்மில் சிலருக்கு, குறிப்பாக மூத்த மற்றும் முன்னோடித் தலைமுறைக்கு, பின்தங்கி விடாதிருக்கக் கூடுதல் உதவி தேவைப்படலாம். எங்களது கடப்பாடுமிக்க மின்னிலக்கத் தூதர் குழுவுடன் சேர்ந்து, நமது மூத்தோரின் மின்னிலக்கப் பயணத்திற்கு ஆதரவளிக்க நாங்கள் இருக்கிறோம்.
மின்னிலக்கமயமாவதில் உள்ள மிகப்பெரிய சவால் முதல் அடியை எடுத்து வைப்பதுதான். எங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும் இதற்கு உதவி புரிய நாங்கள் இருக்கிறோம்.

மூத்தோருக்கான மின்னிலக்கமயமாதல் திட்டம் சிங்கப்பூரின் மின்னிலக்கமயமாதல் திட்டத்தின் ஓர் அங்கமாகும்
கொவிட்-19 கிருமிப்பரவலுக்குப் பிறகு கட்டம் கட்டமாக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குகையில், நம் சமூகத்தில் மின்னிலக்கமயத்தைத் துரிதப்படுத்தும் அரசாங்கத் திட்டங்களை சிங்கப்பூர் மின்னிலக்க அலுவலகம் (SDO) செயல்படுத்தும்.
மேலும் அறிக
தனிநபராக அல்லது நிறுவனமாக நன்கொடை அளிக்கலாம்
நிதி உதவியுள்ள மின்னிலக்கக் கருவிகளுக்கு இணைக்கட்டணம் செலுத்த இயலாத அல்லது எங்களது IMDA மின்னிலக்க அணுகல் திட்டங்களின்கீழ் ஆதரிக்கப்படாத அம்சங்களில் உதவி தேவைப்படும் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கும் தனிநபர்களுக்கும் உங்கள் நன்கொடை உதவியாக இருக்கும்.
மேலும் அறிய