![small-banner-image](/-/media/seniors-go-digital/image/home/components/img-malay-home.png)
வண்ணமயமான மின்னிலக்க வாழ்க்கையுடன் இணைந்திடுங்கள்
மின்னிலக்கமயத்தின் அடுத்த கட்டத்திற்குச் செல்ல நாங்கள் உங்களுக்கு உதவுவோம்!
இது பெரும் பாய்ச்சலாகத் தோன்றலாம். ஆனால், நீங்கள் ஓர் அடி முன்வைத்தாலே போதுமானது.
நீங்கள் தொடங்க நாங்கள் உதவி செய்து, ஒவ்வொரு கட்டத்திலும் உங்களுக்குத் துணை புரிவோம்.
தயாரா? மின்னிலக்கமயமாக வாருங்கள்!
மின்னிலக்கக் கற்றலின் 3 பிரிவுகள்
சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மூத்தோருக்கான மின்னிலக்கமயமாதல் திட்டம், உங்களது மின்னிலக்கக் கற்றல் பயணத்திற்குத் துணை புரியும்.
உங்களது தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப, எங்கள் கற்றல் திட்டம் பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் 3 மின்னிலக்கத் திறன் பிரிவுகளில் வழிகாட்டப்படுவீர்கள்.
கேளிக்கையான, எளிய வழிகளில் புதிய மின்னிலக்கத் திறன்களைக் கற்றுக் கொள்ளுங்கள்!
![digital-journey-support](/-/media/seniors-go-digital/image/detail-pages/about/financial_service/digital-journey-support.jpg)
உங்களது மின்னிலக்கப் பயணத்திற்கு ஆதரவளிப்போம்
மின்னிலக்கமயமாதல் அனைவருக்குமானது. நீங்கள் பங்குபெறும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் பதிவு செய்து, மூத்தோருக்கான பிரத்யேக திறன்பேசித் திட்டங்களை அனுபவிக்கலாம்.
திறன்பேசி அல்லது கைப்பேசித் திட்டம் வாங்க வசதியில்லாத உங்களில் சிலருக்கு, நிதி உதவி கிடைக்கும்.
மேலும் அறிகசில எளிய வழிகாட்டிகளுடன் சொந்தமாகத் தொடங்கிடுங்கள்!
உங்களைச் சுற்றிலுமுள்ள கதைகள்
![Image 1](/-/media/seniors-go-digital/image/detail-pages/carousel_img_01.png)
இப்போதெல்லாம் இணையம்வழி நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். அறிவாற்றலை வளர்த்துக்கொள்வதில் விருப்பம் இருக்கும்வரை, அதற்கான தேடல் தொடரும். என்னைப் பொறுத்தவரை, தொடர்ந்து திறன்களை வளர்த்துக் கொள்வதன்வழி, எதிர்காலத்திற்கு உகந்தவாறு நமது மனப்போக்கும் மேம்படும்.
திரு ரம்லி பின் புத்தே, 66 வயது